முகக்கவசம் அணியாத 70 பேர் கைது!


 முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை உதாசீனம் செய்த 70 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 30ம் திகதி முதல் நேற்று வரை இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண இதனை தெரிவித்தார்.

இதேவேளை, ஊரடங்கு சட்டத்தை மீறிய 179 சந்தேக நபர்கள் கடந்த 24 மணிநேரத்தில் கைதாகியுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கை மீறிய 1812 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.