கள்ள காதலை கண்டித்ததால் தூக்கில் தொங்கிய பெண்!

 


தமிழகத்தில் காதலனுட்ன பழக கூடாது என்று திருமணம் பெண்ணுக்கு பெற்றோர் அறிவுரை வழங்கிய நிலையில், அதை ஏற்க முடியாமல் அப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா. கூலித் தொழிலாளியான இவருக்கு குமாரி என்ற 27 வயதில் மனைவி உள்ளார்.

இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், ஆண் மற்றும் பெண் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், குமாரிக்கு எதிர்வீட்டில் வசிக்கும் தினேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது.

தினேஷ், தாளவாடியில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருமணம் ஆகி, 6 மாத கைக்குழந்தை உள்ளது.
இவர்களின் பழக்கத்தை, இரண்டு வீட்டாருமே கண்டுபிடித்துவிட்டால், இரண்டு பேரின் வீட்டிலும் பிரச்சனை வெடித்துள்ளது.

குமாரி குடும்பத்தினர் தினேஷை சந்திக்க கூடாது, பேசக் கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலில் குமாரி இருந்தார்.

இதற்கிடையில் 2 பேரும் தாளவாடியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

குமாரி கணவனுடன் குடும்பம் நடத்துவதை கண்ட தினேஷ், தன்னுடனேயே வந்துவிடுமாறு குமாரியை கட்டாயப்படுத்தி உள்ளார்.

அவ்வாறு வரவில்லை என்றால், இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால், கணவனா? காதலனா? என்ற குழப்பத்தில், விரக்தியடைந்த குமாரி, விடிகாலை நேரத்தில் வீட்டில் தூக்கு போட்டுக் தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமாரியின் பெற்றோர், மகளின் இறப்பிற்கு எதிர் வீட்டில் இருக்கும் தினேஷ் தான் காரணம் என்று கூறி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, விரைந்து வந்த பொலிசார் குமாரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை விரைவில் தேடி பிடித்து கைது செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

பொலிசார் தற்போது தினேஷ் குமாரை தேடி வருகின்றனர்.

Blogger இயக்குவது.