துஷ்பிரயோகம் செய்ததாக பிரபல நடிகர் கைது!


 பிரபல நடிகரும், இயக்குனருமான விஜய் ராஸ் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் சிவ கார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ படத்தில் வில்லனாக நடித்தவர் 57 வயதான விஜய் ராஸ்.

அவர் மத்திய பிரதேசத்தில் ‘Sherni’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது சக நடிகையை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் பேரில் மகராஷ்டிராவின் கோண்டியா நகரில் உள்ள ஹோட்டலில் வைத்து நேற்று நடிகர் விஜய் ராஸை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும், இதுதொடர்பில் விஜய் ராஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோண்டியா கூடுதல் எஸ்.பி அதுல் குல்கர்னி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.