விமானப்படை சிப்பாய் மரணம்!


 திருகோணமலை, சீனக்குடா துறைமுகத்தின், விமானப் படை முகாமில் கடமையாற்றி வந்த சிப்பாய் ஒருவர் 3 மாடி கட்டடமொன்றிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று (03) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த நபர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார்.

குருணாகல், கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பிரியதர்ஷன எனும் சிப்பாய் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.இது தொடர்பில் சீனக்குடாபொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.