இலங்கைப் பிரஜைக்கு அவுஸ்திரேலியாவில் வழக்கு!


 அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இலங்கைப் பிரஜைக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஒகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் ரோஸ்புட், ரேய், டூட்கரூக், போர்ட்சியா மற்றும் சோரெண்டோ பகுதிகளில் பல திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடிப்படையாக கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் ஒக்டோபர் 21 ஆம் திகதி, மவுண்ட் வேவர்லியில வசிக்கம் 24 வயதுடைய இலங்கைப் பிரஜையொருவின் வீட்டிலிருந்து 67 பைகள் மீட்கப்பட்டுள்ளது.

விக்டோரிய பொலிஸாருடன் இணைந்து அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையிலேயே 10 ஆயிரம் டொருக்கும் அதிகம் பெறுமதியான திருடப்பட்ட பொருட்களுடன் இந்த பைகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பைகளிலிருந்து காலணிகள், குழந்தைகளின் பொம்மைகள், சமயலறை உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், கணினி பாகங்கள், உயர் நிலை மதுபானங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் ஆகியவ‍ை மீட்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக குறித்த இலங்கைப் பிரஜைக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், ஜூலை 20 ஆம் திகதி பிராங்ஸ்டன் நீதிவான் நீதிமன்றல் ஆஜராகுமாறும் அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.