வியன்னா பயங்கரவாதம்; நால்வர் பலி!


ஒஸ்திரியா – தலைநகர் வியன்னாவில் நான்கு பேர் கொல்லப்பட்ட பல துப்பாக்கி சூட்டு சம்பவங்களை அடுத்து சந்தேக நபரை தேடி ஒஸ்திரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மாலை நகரில் ஆறு வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என நால்வர் உயிரிழந்ததோடு பொலிஸ் அதிகாரி உட்பட 17 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் ஒரு பகுதியில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்திய ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட குறித்த நபரை இஸ்லாமிய அரசு பயங்கரவாதி என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

20 வயதான துப்பாக்கிதாரி இஸ்லாமிய பயங்கரவாத அரசு அமைப்பில் இணைவதற்கு சிரியா செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட எட்டு மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பரில் விடுவிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.