காலாவதியான உணவுப்பொருட்கள் மீட்பு!

 


தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள, பருப்பு உட்பட காலாவதியான உணவுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கட்டடமொன்று நேற்று (06 ) ´சீல்´ வைக்கப்பட்டது. 


மத்திய மாகாணத்தின் உதவி உள்ளாட்சிமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகளாலேயே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 


உதவி ஆணையாளர் அலுவலகத்துக்கு, நுகர்வோர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகளும், தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் செயலாளரும் இன்று மேற்படி கட்டடம் அமைந்துள்ள பகுதிக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டனர். 


எனினும், குறித்த கட்டடம் கூட்டுறவால் மூடப்பட்டு சாவியும் எடுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையிலேயே ´சீல்´ வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் செயலாளர் பண்டார, 


" காலாவதியான பொருட்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தை பரிசோதிக்க வந்தோம். எனினும் கட்டடம் மூடப்பட்டிருந்ததால் அதனை சீல் வைத்தோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு இங்கிருந்தே பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. உரிய விசாரணைகள் இடம்பெறும்." என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.