குருநாகல் பேருந்து நிலையத்தில் ஆபாசப்படம் ஒளிபரப்பு!
குருநாகல் மத்திய பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள தொலைக்காட்சி திரையில் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிசாரை அறிவுறுத்தியுள்ளார் நகர மேயர் துஷார சஞ்சீவ விதாரண.
ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள குருநாகல் நகர பகுதியில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தொலைக்காட்சி திரையில் ஆபாசப்படம் ஒளிபரப்பாகியுள்ளது.
இதை படம்பிடித்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது வைரலாக பரவியது.
இதற்கு காரணமானவர்களை கைது செய்யும்படி நகர மேயர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த பலர் தன்னிடம் புகார் அளித்ததாகவும், பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரைக் கைது செய்து விசாரணை நடத்துமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் மேயர் கூறினார்.
கருத்துகள் இல்லை