தனிமைப்படுத்தப்பட்டவரை தாக்கியவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டார்!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கொரோனா தனிமைப்படுத்தல் வளாகத்துக்குள் நுழைந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவரைத் தாக்கிய நபர் ஒருவரும் அவருடைய குடும்பத்தினரும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நபருடன் கூடவே பணியாற்றியிருந்த ஐவர் பருத்தித்துறையில் அவர்கள் பணியாற்றிய நிறுவன வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த இரவு அங்கு நுழைந்த நபர் ஒருவர் அங்கு தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இருந்தபோதிலும் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த மற்றொருவர் தன்னுடைய தொலைபேசியில் பதிவாக்கிய காட்சியின் அடிப்படையில் குறித்த நபரையும் அவருடைய குடும்பத்தாரையும் அடையாளம் கண்ட பொதுச் சுகாதார உத்தியோகத்தர் அவர்களை அவர்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியவகையிலும் அவர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை