அமெரிக்காவில் 10 மில்லியனை கடந்தது!
 அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளதாக  கொரோனா வைரஸ் தொற்றை தொகுத்து வழங்கும் வேல்டோ மீட்டர் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணிநேத்தில் மாத்திரம் புதிதாக 132,540 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்களாக நாளாந்தம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,058,586 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1,248 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்புகள் 242,230 ஆக உயர்வடைந்துள்ளது.

உலகாளாவிய ரீதியில் 49,655,454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 1,248,566 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.