கொரோனா தொற்று பரவல் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல்!


மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் பரவியமைத் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிங்கள பொலிஸ் ஊடக பேச்சாளர்   அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக, மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று பரவியமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பணி கொழும்பு குற்றப்புலானாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் அதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவில் தற்போதுவரை 40 அதிகாரிகள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால், தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இவ்விடயம் தொடர்பில் ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரியும் ஊழியர்களிடமிருந்தே வாக்குமூலங்களைப் பெற வேண்டியுள்ளது. இதன் காரணமாகவும் விசாரணைகள் தாமதமடைகின்றது.

எவ்வாறாயினும் இந்த விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கே நாம் எதிர்பார்த்துள்ளோம்“ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.