ஜோ பைடன் அதிபர் பதவிக்கு தவறாக உரிமை கோரக் கூடாது: டிரம்ப் டுவிட்

 


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களிலும் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்றுள்ளதால், அவர் அமெரிக்காவின் அதிபர் பதவியை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 


அதிபர் தேர்தலில் பின் தங்க துவங்கியதில் இருந்தே, தற்போது அதிபராக இருக்கக் கூடிய டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இந்த நிலையில்,  அதிபர் பதவிக்கு தவறான முறையில் ஜோ பைடன் உரிமை கோரக் கூடாது என டிரம்ப் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். டிரம்ப் மேலும் கூறும் போது, “  ஜோ பைடன் தவறான முறையில் அதிபர் பதவிக்கு உரிமை கோரக் கூடாது. அவ்வாறு உரிமை கோரும் பட்சத்தில் நானும் உரிமை கோர முடியும்” என்று தெரிவித்துள்ளார். 

தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமெரிக்கா  முழுவதும் பல்வேறு மாகாணங்களிலும் டிரம்ப் பிரசார தரப்பு வழக்கு தொடுத்துள்ளது. ஆனால், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக டிரம்ப் தரப்பு குற்றம் சாட்டினாலும் இதற்கான வலுவான ஆதாரங்கள் எதையும் வழங்கவில்லை. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.