மனைவி அழகாக இருந்ததால் கொலை செய்த கணவன்!


 தமிழகத்தில் மனைவி அழகாக இருந்ததால் அவரை கொலை செய்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த தம்பதி தங்கராஜ் – ருக்மணி.

இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.

மேலும் ருக்மணி அழகாக இருப்பார் என்பதால் தங்கராஜ் சந்தேகப்பட்டு குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவதை வழங்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தங்கராஜ், மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அதற்கு ருக்மணியும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு இருவரும் தூங்கிவிட்டனர்.

சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்த தங்கராஜ், தலையில் கல்லைப்போட்டு ருக்மணியை கொலை செய்துவிட்டார். அதன்பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்ற அவர் பொலிசில் சரணடைந்தார்.

இதையடுத்து ருக்மணி சடலத்தை கைப்பற்றிய பொலிசார் தங்கமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.