கணவனை பார்க்க சென்ற மனைவி விபத்தில் பலி!
தமிழகத்தில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் கணவனை பார்க்க ஆசையுடன் சென்ற மனைவி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐசிஎப்-ல் இருந்து அயனாவரம், செல்லும் சாலையில், கீழ்ப்பாக்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் மீது மாநகரப் பேருந்து பின்னால் மோதியதால், அவர் நிலை தடுமாறி கீழே விழ,தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் கையில் இருந்த ஆவணங்களை சோதனை செய்து பார்த்த போது, அவர் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க மிஸ்ஜா என்பது தெரியவந்தது.
இதையடுத்து இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரியவர, விரைந்து வந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த மிஸ்ஜா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் தனது கணவரை பார்ப்பதற்காக ஆசையாக சென்ற போது தான் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்திற்கு காரணமான மாநகரப் பேருந்து ஓட்டுநர் சுந்தர்ராஜனை பொலிசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை