பறக்கும் விமானத்திலிருந்து குதித்த இளம்பெண்!
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் 5,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து குதித்த சம்பவத்தில், விசாரணை அதிகாரி ஒருவர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மடகாஸ்கருக்கு ஆராய்ச்சி ஒன்று தொடர்பாக விமானத்தில் சென்றுகொண்டிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த Alana Cutland (19) என்ற இளம்பெண், திடீரென விமானத்தின் கதவை உடைத்துக்கொண்டு வெளியே குதித்தார்.
விமானி Alanaவை தடுக்க முயல, அவரது சக பயணியான Ruth Johnson, Alanaவின் காலைப் பிடித்துக்கொள்ள, அவர்களிடமிருந்து போராடி தன்னை விடுவித்துக்கொண்டு கீழே குதித்தார் Alana.
இந்நிலையில், இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த Tom Osborne, Alana மலேரியா நோய்க்காக எடுத்துக்கொண்ட மாத்திரையின் பக்க விளைவுதான் Alana விமானத்திலிருந்து குதிக்க காரணம் என தெரிவித்துள்ளார்.
Alana மலேரியாவுக்காக டாக்சிசைக்ளின் என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டுள்ளார். டாக்சிசைக்ளின் ஒரு ஆன்டிபயாடிக் என்றாலும், 50 ஆண்டுகளுக்கு மேலாக அது மலேரியா சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மலேரியாவுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் சில நேரங்களில், மன அழுத்தம், இல்லாதவற்றை இருப்பது போல் தோன்றவைப்பது மற்றும் தற்கொலை எண்ணங்களை தூண்டக்கூடியவையாகும்.
ஆகவேதான், டாக்சிசைக்ளின் எடுத்துக்கொண்ட Alana மன ரீதியாக பாதிக்கப்பட்டு, இப்படி விமானத்திலிருந்து குதித்துள்ளார் என்கிறார் விசாரணை அதிகாரியான Osborne.
ஆனால், Alana மலேரியா நோய்க்காக எடுத்துக்கொண்ட டாக்சிசைக்ளின் மாத்திரையின் உறையில் இது குறித்து எந்த விவரமும் கொடுக்கப்படவில்லை.
அப்படி ஏதாகிலும் விவரம் கொடுக்கப்பட்டிருந்தால், Alanaவின் பெற்றோர் அவரை கவனமாக கவனித்துக்கொண்டிருக்கக்கூடும், இந்த மரணத்தைத் தவிர்த்திருக்கக்கூடும் என்கிறார் Osborne.
Alanaவின் பெற்றோர்களான Neil மற்றும் Alison Cutland வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மாத்திரை ஒன்றின் பக்க விளைவுகளால் Alanaவின் மரணம் நிகழ்ந்துள்ளது துயரமான விடயம் என்று கூறியுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை