தவறான தகவலளித்தால் 7 ஆண்டு சிறை!
நாளை (9) திங்கட்கிழமை முதல் இலங்கை புதிய வழமையின் கீழ் அன்றாட செயற்பாடுகளிற்காக திறக்கப்படும்.
புதிய வழமையின் கீழ் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து சுகாதார அமைச்சு வழிகாட்டல் குறிப்பை வெளியிட்டுள்ளது. அந்த குறிப்புக்களை சரியாக அறிந்து அனைவரையும் செயற்படும்படி பொலிஸ் பேச்சாளர் கேட்டுள்ளார். தொழிற்சாலைகள் பிற வணிகங்களில் செயற்படுபவர்களின் ஆட்தொகை பற்றிய விபரங்களை வழிகாட்டல் குறிப்பில் பெற்று, அதன்படி செயற்பட சம்பந்தப்பட்டவர்களை கேட்டுள்ளார்.
உள்நுழைபவர்களின் வெப்பநிலை கண்காணிக்கப்பட வேண்டும், பணியாளர்கள் பணியிடத்திற்கு நுழையும் போது கைகளை கழுவுவதற்கான வசதிகளையும் நிர்வாகம் வழங்க வேண்டும். வளாகத்திற்குள் நுழைபவர்களின் தகவல்கள் எல்லா நேரங்களிலும் பராமரிக்கப்பட வேண்டும், சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் என்றும் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதுபோன்ற இடங்களில் தவறான தகவல்களை வழங்கும் எவருக்கும் எதிராக தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இதுபோன்ற குற்றங்களைச் செய்யும் நபர்கள் மீது நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை