“1000” ரூபாய் சம்பள கோரிக்கையை கைவிடுங்கள்!


 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையை கைவிட்டு, தம்மால் முன்வைக்கப்படும் தொழில்முனைவோர் பொறிமுறைக்கு உட்பட்ட புதிய சம்பளத் திட்டத்திற்கு தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளும் இணங்க வேண்டும் என்று பெருந்தோட்ட நிறுவனங்களின் புதிய தலைவர் பாத்திய புளுமுல்ல தெரிவித்துள்ளார்.

நேற்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“கடந்த 28 வருடங்களாக கூட்டு ஒப்பந்தம் என்ற விடயத்தில் பெருந்தோட்டத்துறை நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் இணைந்து தொழிலாளர்களின் வேதனத்தை நிர்ணயிக்கின்றன. ஆனால் இந்த வேதனமுறைமை நடைமுறை பொருளாதார நிலைமைகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இந்தமுறைமை மாற்றப்பட்டு, புதிய பொறிமுறைக்குள் செல்ல வேண்டும்.

எங்களால் முன்மொழியப்பட்டிருக்கின்ற புதிய தொழில்முனைவோர் அடிப்படையிலான வேதன முறைமையின் கீழ், தொழிலாளர்களது வேலையும், அதற்கான ஊதியமும் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இந்தமுறைமை ஏனைய நாடுகளில் வெற்றிப் பெற்றிருக்கிறது.

Blogger இயக்குவது.