ராகமையில் கொரோனாவால் ஒருவர் சாவு!


 இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக 41வது மரணம் பதிவாகியுள்ளது என்று இன்று (10) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று ஐவரின் மரணங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா – ராகமையை சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே அவரது வீட்டில் மரணித்த நிலையில் கொரோனா தொற்றால் மரணமானது உறுதியாகியுள்ளது.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 41 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட இருவர் இதுவரை தற்கொலை மற்றும் விபத்து காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.