வெளிநாடுகளிலிருந்து மேலும் 34 பேர் நாடு திரும்பினர்!

 


கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடு களில் சிக்கித்தவித்த மேலும் 34 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.

இலங்கை அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்ட விசேட அனுமதியின் கீழ் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 34 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்லிருந்து 12 பேர், கட்டாரிலிருந்து 22 பேர் இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எனினும் நாட்டை வந்தடைந்த அவர்களுக்கு கட்டு நாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.