முக்கிய விடயம் ஒன்றை ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்திய சுகாதார அமைச்சு

 


தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் மேலும் இரண்டு வாரங்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சுகாதார அமைச்சு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு தெளிவுபடுத்தியுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து வைரஸ் தொற்று மேலும் பரவுவதற்கு சாதகமாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்துவது மிக பொருத்தமானதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு சட்டம் நேற்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மேல் மாகாணத்திலும் வேறு சில பகுதிகளிலும் தனிமைப்படுத்தலுக்கான முடக்கம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

எவ்வாறாயினும் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் தனிமைப்படுத்தலிற்கான சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.