ஜேம்ஸ் பாண்ட் மனைவிக்கு சிறை?
வரி மோசடி வழக்கில் ஜேம்ஸ் பாண்ட் சீன் கானரியின் மனைவிக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஜேம்ஸ் பாண்ட் 007 படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த படங்களில் வரும் கார்கள் தனித்தன்மையுடன் இயங்க கூடியவை. மற்ற கார்களை போன்று அல்லாமல், பின்னால் வரும் எதிரிகளை தாக்க கூடிய வகையில், பாண்ட் கார் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பலர் நாயகர்களாக நடித்துள்ளனர். அவர்களில் ஒருவர் பழம்பெரும் நடிகர் சீன் கானரி (வயது 90). இவரது மனைவி மிச்செலின் ரோக்புரூன் (வயது 91). கடந்த சில நாட்களுக்கு முன் கானரி உடல்நல குறைவால் காலமானார்.
சீன் கானரியின் மார்பெல்லா வீடு கடந்த 1999ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் அவற்றை இடித்து விட்டு 70 பிளாட்டுகள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால் 5 பிளாட்டுகள் கட்டுவதற்கே அந்நாட்டு விதிகள் அனுமதிக்கின்றன.
இந்த நிலையில் விதிமீறலுக்காக, நீண்ட நாட்களாக இந்த வழக்கு நடந்து வருகிறது. வழக்கில், கானரியின் வழக்கறிஞர்கள், மார்பெல்லா நகர மேயர் மற்றும் 6 கவுன்சிலர்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
சமீபத்தில் கானரி மறைந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் பிறந்தவரான மிச்செலின் இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
மிச்செலின் வழக்கை சந்தித்து, சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் வரி மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டால் அதிக அளவுக்கு அபராத தொகையை செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி சார்பில் கூறப்படுகிறது.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை அர்த்தமற்றது என்று சீன் கானரியின் மனைவி மிச்செலின் புறந்தள்ளியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை