11 வயது சிறுமிக்கு கொரோனா!


 நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியான மேலும் 404 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 17 ஆயிரத்து 674 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 5 ஆயிரத்து 403 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, சிகிச்சைப் பெறுவதற்காக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜி. விஜேசூரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு 12ஐ சேர்ந்த சிறுமி ஒருவருக்கே இன்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவருக்கு சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 5 வைத்தியர்கள் உட்பட 60 பேருக்கு கொவிட-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் பணிக்குழாமை சேர்ந்த 5 தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணிக்குழுவை சேர்ந்த 6 பேரும் உள்ளடங்குகின்றனர்.

ஏனைய அனைவரும் சிறுவர்கள் மற்றும் தாய்மார்களாவர் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.