வைரலாகும் சூர்யாவின் வீடியோ!

 


சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில எதிர்மறையான விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்தாலும் பெரும்பாலானோர் நேர்மறை விமர்சனங்களை கொடுத்துள்ளதால் இந்த படத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


குறிப்பாக சூர்யாவின் மிகச் சிறப்பான நடிப்பு, அதற்கு ஈடுகட்டும் வகையில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பு, சுதா கொங்காராவின் திரைக்கதை, ஜிவி பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவைகளுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வணக்கம்! ஒரு புது அனுபவத்திற்கு நீங்கள் தயாரா? சூரரைப்போற்று படத்தை குடும்பத்தோடு ஒன்றாக உட்கார்ந்து பார்த்து வருகிறீர்கள். நீங்கள் அமேசான் பிரைமில் குடும்பத்துடன் படம் பார்த்து ரசிப்பதை ஒரு 20 செகண்ட் வீடியோவாக ரெக்கார்டு செய்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய விமர்சனங்கள் ஆகியோர்களை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். உங்களுடைய சந்தோஷத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய சந்தோசத்தை இந்த உலகத்தோடு நாங்கள் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்


ஏற்கனவே ரசிகர்கள் அனுப்பிய ஆட்டோகிராப் கையெழுத்துக்களை ராட்சச பலூன் ஒன்றின் மூலம் சூரரைப்போற்று படக்குழுவினர் பறக்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.