அரச இலச்சினையை பொருத்தி நுட்பமாக மதுபானம் கடத்திய கில்லாடிகள்!
ரெலிகொம் நிறுவனத்தின் குறியீட்டை போலியாக வாகனத்தில் பொறித்து, அதில் மதுபானம் கடத்திய இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹாவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தபோது, இந்த சம்பவம் நடந்தது. கம்பஹாவிலிருந்து கொச்சிக்கடை பகுதிக்கு அவர்கள் சாராயம் கடத்த முயன்றனர்.
கொச்சிக்கடை, தோப்புவ வீதியில் ரெலிகொம் இலட்சினை பொறித்த சந்தேகத்திற்குரிய வாகனத்தை பொலிசார் மறித்து சோதனையிட்ட போது, கடத்தல் அம்பலமானது.
வாகனத்தில் இருந்து 70 போத்தல் அரசு அங்கீகாரம் பெற்ற சாராயம், 12 போத்தல் லெமன் ஜின் மற்றும் 103 பியர் கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை