இன்று காலை பொலிஸார் வெளியிட்ட செய்தி!

 




கொழும்பைச் சுற்றியுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிறப்பு அம்பியூலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

0113422558 இந்த எண்ணை தொடர்பு கொள்வதன்மூலம் நேவையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பெட்டா மெனிங் சந்தையை திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இன்று காலை வழங்கிய விசேட நேர்காணலில் இதை குறிப்பிட்டுள்ளார்.

மெனிங் சந்தை தொடர்பாக இதுவரை பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தாத அனைவரும் 0718591551 என்ற எண்ணுக்கு காவல்துறையினரை தொடர்பு கொண்டு சோதனைகளை மேற்கொள்ளலாம் என்றும் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.