பயங்கரவாதிகளின் கோரச்செயல்!
வடக்கு மொசாம்பிக்கில் பயங்கரவாதிகளால் 50க்கும் மேற்பட்டோர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்சிசகர தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத குழுவான ஐ.எஸ் அமைப்பு வடக்கு மொசாம்பிக்கில் உள்ள கபோ டெல்கடோ பிராந்தியத்தின் நஞ்சாபா கிராமத்தில் இந்த பயங்கர அட்டூழியத்தை நிகழ்த்தி உள்ளது.
பயங்கரவாதிகள் ஒரு கால்பந்து மைதானத்தை தங்கள் கொலைக் களமாக மாற்றி அங்குள்ள கிராம மக்களை தலைகீழாக தொங்கவிட்டு தலைகளை வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இரவு நஞ்சாபா கிராமத்தில் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
பாதிக்கப்பட்ட மாகாணத்தில் ஆண்டுதோறும் குறைந்தது 2,000 பேர் கொல்லப்படுகிறார்கள் மற்றும் 400,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர்.
பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதல்களில் சமீபத்திய தாக்குதல்கள் மிக மோசமானது என்று கூறப்படுகிறது. தாக்குதல்களின் மூர்க்கத்தன்மை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மொசாம்பிக் அரசாங்கத்தின் அலட்சியத்தால் கபோ டெல்கடோ பிராந்தியத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது.
கருத்துகள் இல்லை