யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

 


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வருடாவருடம் வழமையாக யாழ். மாநகர சபையினால் அனுமதிக்கப்படும் 'பண்டிகைகால அங்காடி' வியாபாரத்திற்கு இம்முறை முற்றாக தடை விதிக்கப்படுவதாக யாழ். மாநகரசபை முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் பரவல் மற்றும் அதன் தாக்கங்களிலிருந்து பொது மக்களை பாதுகாப்பது எமது கடமையாகும்.

அந்த வகையில் கொவிட் 19 தாக்கத்திலிருந்து யாழ். மாநகரத்தையும், பொது மக்களையும் பாதுகாக்கும் வகையில் எம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னாயத்த நடவடிக்கைகளின் தொடராக சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை கருத்திற்கொண்டு இம்முறை பண்டிகைகால அங்காடி வியாபாரம் முற்றாகத் தடைசெய்யப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.