முன்னாள் பிரதமரின் மகளின் பேச்சால் சர்ச்சை!

 


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா வைரசை போன்றவர் என முன்னாள் பிரதமரின் மகள் மரியம் நவாஸ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். அவர் கில்ஜித்-பலுதிஸ்தானில் வருகிற ஞாயிறன்று நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு 7 நாள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக கில்ஜித்-பலுதிஸ்தான் நகரில் குப்பிஸ் என்ற பகுதியில் நடந்த பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு மக்களிடையே பேசினார். அவர் பேசும்பொழுது, கொரோனா வைரஸ் என்ற தொற்று சமீபத்தில் உலகிற்கு வந்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டிலேயே பாகிஸ்தானில் அது பரவி விட்டது.

இந்த தொற்றுநோய் முக கவசங்களை அணிந்து கொண்டால் போய் விடாது. அதனை நீங்கள் தூக்கி எறிய வேண்டும் என கூறினார். தொடர்ந்து, இம்ரான் போன்ற நபர்களின் பெயர்களை பற்றி பேசுவதே வலி ஏற்படுத்துகிறது என கூறிய மரியம் நவாஸ், கான் மற்றும் அவரது கட்சி பாகிஸ்தானில் இன்றைய தினம் நோயை பரப்பி கொண்டிருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் இருக்க கான் தகுதியற்றவர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.