தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறிய குழுவின் செயற்பாடு!!
கந்தகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் தன்மைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் வெளியேறிய ஒரு குழுவினர் கம்பஹா செல்லும் வழியில் தாங்கள் வந்த பேருந்தை இடைநடுவில் நிறுத்திவிட்டு மது அருந்தியதாக தனக்கு தகவல் கிடைத்ததாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் மிகார எப்பா தெரிவித்தார்.
இவ்வாறு மது அருந்திய அவர்கள் பேருந்திலும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கம்பஹா மாவட்ட செயலாளர், இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளதாக மருத்துவர் மிகாரா எப்பா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை