இலட்சக்கணக்கில் கரையொதுங்கிய மீன்குஞ்சுகள்!

 




முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்றையதினம் திடீரென பல இலட்சக் கணக்கான மீன் குஞ்சுகள் கரையொதுங்கியுள்ளன.

நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெரும் கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்காலிலேயே இந்த மீன்குஞ்சுகள் கரையொதுங்கின.

நேற்று மாலை தொடக்கம் பெய்து வரும் தொடர் மழை காரணமாகவே இந்த மீன் குஞ்சுகள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கரையொதுங்கிய மீன்குஞ்சுகள் கெழுத்தி இன வகையை சார்ந்தவை ஆகும். கரையொதுங்கிய மீன் குஞ்சுகளை பொதுமக்கள் பார்வையிடுவதோடு வலை வீசியும் பிடித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.