திருமணநிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

 


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பண்டராகமவின் கம்மன்பில பகுதியில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட பல குடும்பங்களை தனிமைப்படுத்த இன்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பண்டராகம சுகாதார அதிகாரி மருத்துவர் நிமேஷா ரத்னவீரா தெரிவித்தார்.

இந்த திருமணம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது, திருமணத்திற்கு 40 முதல் 50 பேர் வரை கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மில்லேனியாவில் வசிக்கும் மணமகனின் சகோதரர் திருமணத்தில் கலந்து கொண்டார், சில நாட்களுக்குப் பின்னர் அவர் கொரோனா அறிகுறிகளால் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்று சுகாதார மருத்துவ அதிகாரியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

9 ஆம் திகதி மருத்துவ அறிக்கையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து, அவர் இருக்கும் இடம் குறித்து விசாரித்த பின்னர் இது தெரியவந்துள்ளது என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.