அண்ணியை கொலைசெய்த கொழுந்தன்!
இந்தியாவில் அண்ணியை கொலை செய்த கொழுந்தன் பொலிசில் சரணடைந்த நிலையில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
டெல்லியை சேர்ந்தவர் ரோகித். இவரின் மூத்த சகோதரர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தனது அண்ணி மற்றும் தாயாருடன் ரோகித் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று தனது அண்ணியை கழுத்தை நெரித்து ரோகித் கொலை செய்திருக்கிறார்.
பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு வந்த அவர் தனது அண்ணியை கொலை செய்து விட்டதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் ரோகித் வீட்டுக்கு சென்று சடலத்தை கைப்பற்றினார்கள்.
பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில், எனது அண்ணிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நான் என் தாயை விட்டு பிரிந்து இருக்க வேண்டும் எனவும், அவருடன் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் அண்ணி என்னை வற்புறுத்தி வந்தார்.
இது தொடர்பாக எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்தேன் என கூறி அதிரவைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை