பிரிகேடியார் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் !

 தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச் செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 02-11-2020 அன்று தமிழர்

ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு பணிமனையில் சுகதார நடைமுறைகளுக்கு ஏற்ப இடம் பெற்றது. 
 சிறீலங்க அரசின் வான் தாக்குதலில் 02.11.2007 அன்று தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட, லெப்.கேணல் அலெக்ஸ், மேஜர் செல்வம், மேஜர் மிகுதன், மேஜர் கலையரசன், லெப் ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகியோர் வீரச்சாவை தழுவிக்கொண்டார்கள்.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை செயற்பாட்டாளர் திரு பாலகுமாரன் அவர்கள் ஏற்றி வைத்தார்அதனைத்தொடர்ந்து, ஈகைச் சுடரினை மாவீரர் ஆதவனின் சகோதரர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அனைவராலும் சுடர்வணக்கமும், மலர்வணக்கமும் செலுத்தப்பட்டது 
 "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற மந்திரத்துடன் நிறைவுற்றது.
Blogger இயக்குவது.