கொரோனா அச்சத்தால் மூடப்பட்டது வெலிமடை நீதிமன்றம்!

 



கொரோனா அச்சம் காரணமாக வெலிமடை நீதிமன்றத் தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நீதிமன்றத்துக்கு வரக்கூடும் எனும் அச்சத்தால், வெலிமடை நீதிமன்றத் தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வெலிமடை நீதவான் நீதிமன்றம், வெலிமடை மாவட்ட நீதிமன்றம் ஆகியனவே மூடப்பட்டுள்ளன.

வெலிமடை நீதவான் நீதிமன்ற நீதிபதி நதீரா போகாதெனிய விடுத்த உத்தரவுக்கமையவே, இந்த நீதிமன்றங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்க சார்பில் சேனக்க பண்டார தெரிவித்தார்.

நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ள காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள வழக்குகளுக்கான மாற்றுத் திகதிகள், நீதிமன்றம் மீள் திறக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.