முல்லைத்தீவில் திடீர் அனர்த்தம் ஏற்பட்டால் என்ன செய்வது?
முல்லைத்தீவு மாவட்டத்தில் பருவபெயர்ச்சி மழையின் காரணமாக அனர்த்தங்கள் ஏற்படுமாயின் அவற்றிலிருந்து மக்களை பாதுகாத்து அதனை எதிர்கொள்ள முப்படையினரும், அரச சார்பற்ற நிறுவன ஊழியர்களையும் தயார்படுத்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இ.இலிங்கேஸ்வரகுமார் தலைமையில் நேற்று காலை மாவட்ட செயலகத்தில் இக் கூட்டம் நடைபெற்றது.
அரசாங்க அதிபர் க.விமலநாதன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், செயலாளர்கள், அரச சார்பற்ற திணைக்கள அதிகாரிகள் மற்றும் முப்படையினர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை