விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!


 மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவு, அம்பிளாந்துறையில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மண்டூர் பலாச்சோலை, மயான வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சு.பரணிதரன் என்னும் (37-வயது) குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை தீபாவளி தினத்தில் வெலிக்கந்தையில் இருக்கும் வயலுக்கு சென்றுகொண்டிருக்கும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றபோது வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் மின்சார தூணில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Blogger இயக்குவது.