தீபாவளி வாழ்த்து தெரிவித்த அமெரிக்காவின் முக்கிய 3 தலைவர்கள்!உலகளாவிய இந்துக்கள் நேற்று தீபாவளியை கொண்டாடிய நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்கள்

ட்ரம்ப்

தமது டுவிட்டர் பக்கத்தில் விளக்கேற்றும் படம் ஒன்றை பதிவிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன்

தீபாவளி திருவிழாவைக் கொண்டாடும் மில்லியன் கணக்கான இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு,எங்கள் தீபாவளி வாழ்த்துக்களை அனுப்புகிறேன். உங்கள் புதிய ஆண்டு நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றால் நிரப்பப்படட்டும். சால் முபாரக்.

கமலா ஹாரிஸ்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் சால் முபாரக். உலகெங்கும் கொண்டாடும் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான புத்தாண்டை நான் விரும்புகிறேன்.

Blogger இயக்குவது.