விதிக்கப்பட்டு இருந்த மற்றுமொரு தடை நீக்கப்படுகின்றது!


 மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவு நாளை நீக்கப்படும் என்று கோவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் தற்போது பூட்டப்பட்ட நிலையில் உள்ள 12 பகுதிகளுக்கு மேலதிகமாக மேலும் ஐந்து பொலிஸ் பகுதிகள் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.

இதற்கிடையில், கம்பஹாவில் உள்ள ஆறு பொலிஸ் பகுதிகள் தவிர, மாவட்டத்தின் மீதமுள்ள பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட தனிமை உத்தரவுகள் நீக்கப்பட்டன.

நாளை அதிகாலை 5 மணி முதல் களனிய பொலிஸ் பகுதியும் தனிமைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

Blogger இயக்குவது.