தரம் குறைவான முகக்கவசங்களை வைத்திருந்த விற்பனையாளர்!


 கொவிட் – 19இன் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கொவிட் – 19 தாக்கம் அற்ற வவுனியாவை கட்டியெழுப்புவோம் எனும் எண்ணக்கருவில் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் தரம் குறைவான முகக்கவசங்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.

இந்த நிலையில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தரம் குறைவான முகக்கவசங்கள் பல சில வர்த்தக நிலையங்களில் இருந்து சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தக நிலையங்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.