அடிக்கடி பசி எடுக்கிறதா? நோயின் அறிகுறி!


 உணவை பொறுத்தவரையில் சிலருக்கு உணவை பார்த்தாலே வெறுப்பாக இருக்கும். சிலருக்கோ சாப்பிட்டு முடித்த உடனேயே பசியுணர்வு ஏற்படும்.

மேலும் அடிக்கடி பசி உணர்வு ஏற்பட என்ன காரணம் மற்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை பற்றி இங்கு காண்போம்.

அடிக்கடி பசி எடுப்பதற்கு முக்கிய காரணம்
  • அதிக மனஅழுத்தம் ஏற்படும்போது அது கார்டிசோல் என்னும் ஹார்மோனை சுரக்கும். இதனால் சாப்பிட வேண்டிய உணர்வு தோன்றும்.
  • காலை உணவை தவிர்ப்பவர்களின் எடை வழக்கத்தை விட அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே காலை உணவாக புரோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது பசியுணர்வு கட்டுப்படுத்தப்படும்.
  • கூல்டிரிங்க்ஸ் குடித்தால் அவை அளவு உடலில் அதிகரிக்கும் போது இது லெப்டின் ஹார்மோன் மூளைக்கு பசியுணர்வை கட்டுப்படுத்தும் சிக்னலை தடுக்கிறது. இதனால் நமக்கு மேலும் உணவு உண்ண வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
  • மது அருந்துவது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மது அருந்துவது நீங்கள் பசியாக இல்லாவிட்டாலும் உங்கள் மூளையை பசி போன்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்த தூண்டும்.
  • உடலில் நீரின் அளவு குறைவாக இருக்கும்போது மூளையின் ஹைப்போதலாமஸ் பசி, தாகம் போன்ற கலவையான உணர்வுகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
  • அதிக கார்போஹைடிரேட் உள்ள உணவுகள் சாப்பிட்ட பிறகு ஒரு கப் தேநீர் குடிப்பது அவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பை 10 சதவீதம் குறைக்கிறது.
  • பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் அதிக அளவு வைட்டமின் கே மற்றும் இன்சுலின் சுரப்பை சீராக்கும் சத்துக்கள் உள்ளது. இது உங்களின் பசியுணர்வை கட்டுப்படுத்தும்.
அடிக்கடி பசி எடுப்பதால் வரும் நோய்கள்
  • எந்நேரமும் பசியாக இருப்பது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதுபோன்று பசி அதிகம் எடுக்க காரணம் சர்க்கரை நோயாக இருக்கலாம்.
  • உங்களின் தூக்கமின்மை, நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள், கடினமான டயட், தைராய்டு பிரச்சினை. குறைந்த சர்க்கரை அளவு என இது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.