ஒரே நாளில் 33,979 பேருக்கு கொரோனா!


 உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோய்க்கு, தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 5 கோடி பேருக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி 10-வது இடத்தில் உள்ளது.

இத்தாலியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு கட்டுபடுத்தப்பட்ட ஊரடங்கை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பின் அளவைப் பொறுத்து, இத்தாலியில் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒரே நாளில் 33,979 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.78 லட்சத்தைத் தாண்டியது. அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 546 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.