யாழில் உயிரிழந்த முதியவர் சடலம் இரகசியமாக புதைப்பு!


 உடுவில் பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்ட முதியவரின் உடல் இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது. உறவினர்களிற்கிடையிலான சொத்து பிரச்சனையால் முதியவரின் உடல் புதைக்கப்பட்ட தகவல் அம்பலமானது.

உடுவில் மல்வம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

மல்வம் பகுதில் சுமார் ஒன்றரை மாதங்களின் முன்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் முதியவரின் உடல் மல்வம் மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளது. அவரது இறப்பு பற்றி யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சொத்துக்களை பகிரும் போது உறவினர்களிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து தகவல் வெளியாகி, பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீதிமன்ற அனுமதியுடன் சடலம் இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது.

Blogger இயக்குவது.