மூன்று திருமணம் செய்துவிட்டு நான்காவது பெண் தேடும் இளைஞர்!


 பாகிஸ்தானில் ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்து கொண்ட 20 வயது இளைஞன் தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.

பாகிஸ்தானின் Siyalkot பகுதியைச் சேர்ந்த அட்னான் என்ற 20 வயது இளைஞனே தனக்கு நான்காவது திருமணம் செய்ய பெண் தேடி வருகிறார்.

இதில் அவர் மட்டுமின்றி, அவருடைய 3 மனைவிகளும் கணவருக்காக இணைந்து பெண் தேடி வருகின்றனர். தனது 16 வயதில் முதல் திருமணம் செய்து கொண்ட அட்னான், அதன் பிறகு சுமார் மூன்று வருடங்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு, கடந்த ஓராண்டுக்கு முன்னர் மூன்றாவதாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களின் பெயர்கள் ஷும்பல், ஷபானா, ஷாஹிதா ஆகும்.

மூன்று மனைவிகளின் பெயரும் S என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் அதே எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் பெண்ணை நான்காவதாக திருமணம் செய்ய விரும்புவதாக அட்னான் தெரிவித்துள்ளார்.

மாதத்திற்கு எனக்கு 1 முதல் 1.15 லட்ச ரூபாய் வரை தேவைப்படும். ஒவ்வொரு திருமணம் நடைபெறும் போதும், எனது நிதிநிலை மேம்பட்டுக் கொண்டே இருப்பதாகவும், மூன்று மனைவிகள் உள்ளதால் அவர்கள் மாறி மாறி அல்லது அட்னானுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள் என நினைக்கலாம்.

ஆனால்,மூன்று மனைவிகளுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை அட்னான் அவர்களிடம் போதுமான கவனத்தை செலுத்தவில்லை என்பது தான். அதே போல, தற்போதுள்ள 3 மனைவிகளும் தங்களது நேரங்களை பிரித்து அட்னானை மாறி மாறி கவனித்து வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Blogger இயக்குவது.