20 நிமிடத்தில் கொரோனா முடிவை கூறும் கருவி!
கொரோனா பரிசோதனைக்காக அன்டிஜென் சோதனை கருவிகளை அடுத்த வாரம் முதல் பயன்படுத்த சுகாதார அமைச்சு ஆலோசனை நடத்தி வருகிறது.
குறித்த சோதனை கருவியானது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை 20 நிமிடங்களில் கூறிவிடும் என தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் ஆய்வு கூடத்தில் குறித்த சோதனை கருவிகள் சோதனை பயன்பாட்டில் இருப்பதாக தெரியவருகிறது.
இந்த அன்டிஜென் சோதனை கருவிகள் 200,000 (இரண்டு இலட்சம்) தற்போது தென் கொரியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை