பிரமுகர்கள் தங்கிய ஹோட்டல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டல்!
கொழும்பில் இருந்து வந்த அமைச்சர்கள், அதிகாரிகள் – அவர்களின் உதவியாளர்கள் தங்கி நின்ற யாழ் நகர ஹோட்டல்களின் ஊழியர்களை முன்பாதுகாப்பு நோக்கில் சுய தனிமைப்படுத்தல் முறையின் கீழ் பணியில் வைத்திருப்பது நல்லதென சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலக கூட்டத்தில் கலந்து கொள்ள அரசின் முக்கிய அமைச்சர்கள், அவர்களின் பாதுகாப்பு உத்தியோக்கர்கள் வருகை தந்திருந்த நிலையிலேயே சுகாதார அதிகாரிகள் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி ஹோட்டல் நிர்வாகங்கள் தாமாக முன்வந்து தமது ஊழியர்களை 14 நாட்கள் ஹோட்டலில் இருந்து வெளியேறாமல் பணியாற்ற வகை செய்வது நல்லதென சுட்டிக்காட்டுகின்றனர்.
கருத்துகள் இல்லை