கடைக்கு கொரொனா எனப் பெயர் வைத்த இளைஞர்!


 கொரோனா என்ற பெயர் கடந்த ஒரு வருடமாகத்தான் உலகம் முழுவதும் அறிமுகமானது என்ற நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கேரளாவில் உள்ள இளைஞர் ஒருவர் தனது கடைக்கு கொரோனா என்று பெயர் வைத்துள்ள ஆச்சரிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது

கேரளாவிலுள்ள கோட்டயம் என்ற பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டு உபயோக பொருட்கள்விற்பனை நிலையத்தை ஆரம்பித்த ஜோர்ஜ் என்ற இளைஞர் தனது கடைக்கு கொரோனா என்று பெயர் வைத்தார்

கொரோனா என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் கிரீடம் என்று பொருள் என்றும், அதனால் கிரீடம் போல் தனது கடையின் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த பெயரை வைத்ததாக உரிமையாளர் ஜோர்ஜ் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது கொரோனா என்ற பெயர் உலகம் முழுவதும் பரவிவிட்ட நிலையில் எனது கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் வந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே கொரோனா என கடைக்கு பெயர் வைத்த இளைஞருக்கு அந்தப் பகுதியினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

Blogger இயக்குவது.