கொரோனாவால் கோமா நிலைக்கு சென்ற கர்ப்பிணி!


 பர்மிங்காம் நகர மருத்துவமனையில்,முடக்குவாத நோய் சிகிச்சை மருத்துவ ஆலோசகராக இருந்த பெண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் உடல் நலம் சரி இல்லாமல் போனது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு,வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் இவரது கருவில் இரட்டைர் சிசுக்கள் வளர்ந்து கொண்டிருந்தன,கடந்த ஏப்ரல் மாதம் 26 வாரங்களே ஆன இவருக்கு பிரசவம் நடந்தது.

சிசேரியன் மூலம் நடந்த பிரசவத்தில் உகேவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
சொசிகா பால்மர் என்ற குழந்தை 770 கிராம் எடையிலும்,அதன் சகோதரர் ஒசினாசி பாஸ்கல் 850 கிராம் எடையிலும் இருந்தனர்ஆனால்,பிரசவம் நடந்த பிறகும் குழந்தைகளின் தாய் உகே,அடுத்த 16 நாட்களுக்கு கோமா நிலையிலே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.