24 மணி நேரத்தில் ஒரு நபரும் 3 யானைகளும் பலி!


 மனித-யானை மோதல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் 3 யானைகளும் ஒரு மனிதரும் இறந்துள்ளனர்.

வெல்லவாயா - கெமுனுபுர பகுதியைச் சேர்ந்த 62 வயது நபர் நேற்று மதியம் காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, வவுனியாவின் செட்டிகுளத்தில் உள்ள கப்பாச்சி தொட்டியின் மேற்பரப்பில் இறந்த காட்டு யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த யானைக்கு 7 வயது எனவும் இது  விஷம் உட்கொண்டமையால் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இன்று பொலன்னறுவை கல்லெல்லா பகுதியில், சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் யானையின் சடலம் ஒன்றை  நெல் வயலிலிருந்து  வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மற்றுமொறு இறந்த காட்டு யானையின் சடலம் முந்தள - வில்மென்ன சரணாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ் யானைகளின் பிரேத பரிசோதனையில் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட  யானைகள் நஞ்சு கலந்த உணவை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. 

காட்டு யானைகளின் வாழ்விடங்கள் மனித குடியேற்றங்களாக மாற்றப்பட்டுள்ளமையும், காட்டு யானைகள் உணவு தேடி குடியிறுப்புகளுக்கு பிரவேசிப்பதுடன், விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும் இலங்கையில் நடத்து வரும் யானை மனித மோதலுக்கு காரணமாகியுள்ளது.

இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் யானைகள் மற்றும் மனிதர்களின் உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்துகொண்டு செல்கின்றது. 

இந்நிலையில் அண்மை காலமாக இலங்கையில் அதிக யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.