கொழும்பு 4000 கொரோனா தொற்றாளர்!


 கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இது வரை முறையே 4333 மற்றும் 4,640 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 4.00 மணிவரையான காலப்பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை 4333 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில்  இதுவரை 61,500 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கம்பாஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மிகாரா எப்பா தெரிவித்துள்ளார்.

இதேவேளை,கொழும்பு மாவட்டத்தில் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்தமாக எண்ணிக்கை 4,640 ஆக பதிவாகியுள்ளது. 

அவர்களில் 3,600 க்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முகத்துவாரம், மட்டக்குளி, மாலிகாவத்தை, மாகாவத்தை மற்றும் ஜம்பட்டா வீதிபோன்ற பகுதிகள் கொழும்பில் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் மட்டும் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது மற்றும் ஜின்துபிட்டி பகுதியில் இருந்து மாத்திரம்  அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை  800 ஆகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.