சுகாதார தேவைக்கான பொருட்கள் ஸ்கொட்லாந்தில் இலவசம்!


 பெண்களின் மாதவிடாய் காலங்களில் தேவைப்படும் அனைத்து பொருட்களையும் இலவசமாக கிடைக்கச் செய்யும் நாடாக ஸ்கொடாலாந்து மாறியுள்ளது.

இதற்கான சட்டமூலம் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் நேற்று (24) ஏகமனதாக நிறைவேறியுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள கடைகளில் சுகாதார நாப்கின்கள் மற்றும் டம்பொன்கள் (tampon), தேவைப்படும் பெண்களுக்கு இலவசமாகக் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன் இச்சட்டமூலத்தின் கீழ், ஸ்கொட்லாந்து அரசாங்கம் நாடு தழுவிய திட்டத்தை அமைக்க வேண்டும். மேலும், பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கான மாதவிடாய் காலங்களில் தேவைப்படும் பொருட்களை இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.